நித்திரவிளை அருகே வீட்டில் தீ விபத்து பொருட்கள் சேதம்

நித்திரவிளை அருகே வீட்டில் தீ விபத்து பொருட்கள் சேதம்
தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
நித்திரவிளை அருகே அந்தப் பகுதியில் கொட்டப்பட்ட குப்பையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அருகில் உள்ள வீட்டிலும் தீப்பிடித்தது பொருட்கள் சேதம் அடைந்தது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியில் ஏழுதேசம் 'சி' கிராம அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு ஏவிஎம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஒட்டி டோல்பஸ் (65) என்பவரது வீடு உள்ளது. இந்த வீட்டு கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்தப் பகுதியில் கொட்டப்பட்ட குப்பையில் திடீரென தீப்பிடித்தது. தீ திடீரென பரவி அருகில் உள்ள டோல் பஸ் வீட்டிலும் பரவி தீப்பிடித்தது. உடனடியாக இது சம்பந்தமாக கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் சியாம் ராபின்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. வீட்டில் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Tags

Read MoreRead Less
Next Story