மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் திடீர் தீ விபத்து!

மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் திடீர் தீ விபத்து!

தீ விபத்து

புதுக்கோட்டை நகரப் பகுதியான கீழ மூன்றாம் வீதியில நள்ளிரவு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகரப் பகுதியான கீழ மூன்றாம் வீதியில நள்ளிரவு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் திடீர் தீ விபத்து. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பாக்ஸ் வெடித்து சிதறியது இதனால் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு திமுக ஆட்சியில் பொதுமக்கள் பரிதவிப்பு.

புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் அருகே நேற்று நள்ளிரவு அங்குள்ள ஈபி போஸ்ட் உள்ள பாக்ஸ் தீப்பற்றி எரியத் தொடங்கியது அப்பொழுது வீடுகளில் உள்ள மின் விளக்குகள் விட்டுவிட்டு எரிந்துகிறார்.

இதனால் இபியில் ஏதோ பிரச்சினை நடக்கிறது என உணர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கும் பொழுது தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பாக்சில் லேசாக புகை வர தொடங்கியது பின்னர் நேரமாக திடீரென தீப்பற்ற தொடங்கிய அந்த பாக்ஸ் பின்னர் பலத்த சத்தத்துடன் 20 முறைக்கு மேல் வெடித்து சிதறியது இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பாரை ஆப் செய்து விட்டனர் இதனை அடுத்து தண்ணீரை கொண்டு பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர் திமுக ஆட்சியில் அப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக வயர்கள் மூலம் புதிய போஸ்டர் நடப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் பொதுவாகவே அந்த கம்பிகளின் வழியே தான் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பார்கள் ஆனால் புதிதாக மேலே ஒரு இரும்பு பாக்ஸ் ஒன்று வைக்கப்பட்டு அதன் வழியே வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது அப்பொழுதே அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு அப்பொழுது அவர்கள் கூறிய பதில் இதுபோல்தான் அனைத்து இடங்களிலும் கொடுக்கப்படுகிறது கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தனர் ஆனால் அவர்கள் சுக்கூறியவாறு நடக்கவில்லை ஏனென்றால் கடந்த ஆறு மாதத்தில் அப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட பாக்ஸ்கள் இதே போல் வெடித்து சிதறி உள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு இந்த பாக்ஸ் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் சுமார் நான்கு மணி நேரம் அவதிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .திமுக ஆட்சியில் இன்னும் பொதுமக்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்களோ என பொதுமக்கள் தலையில் அடித்துக் கொண்ட காட்சி பரிதாபமாக இருந்தது.

Tags

Next Story