பர்கூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து !

பர்கூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து !

 தீ விபத்து

பர்கூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் இருப்பு பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
பர்கூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் இருப்பு பொருட்கள் எரிந்து சேதம் : 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு சமுதாய கூட வளாகத்தில் கப்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது மகன் கதிரேசன் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பிளாஸ்டிக், பீங்கான், மரத்தினாலான கைவினை பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியனை விற்பனை செய்யும் ஹோல் சேல் கடை நடத்தி வருகிறார். கடந்த 18ஆம் தேதி அன்று அவரது கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவையொட்டி கடைக்கு கடந்த மூன்று நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்களாக கடையில் யாரும் இல்லாத நிலையில் இன்று இரவு தீடீரென லாஸ்ட் குடோன் தீ பற்றி எரிந்து பிளாஸ்டிக் தீயில் கருகும் வாடை அப்பகுதி முழுவதும் பரவியது, இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்தனர் மேலும் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதின் காரணமாக பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது பின்னர் அக்கம் பக்கத்தினர் வெளிவந்து பார்த்தபோது பிளாஸ்டிக் குடோன் தீயில் கருகி நெருப்பு மண்டலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இந்நிலையில் அங்கு இரவு ரோந்தில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் குட்டியப்பன் பர்கூர் போலீசார் மற்றும் உளவுத்துறை காவலர் மில்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பர்கூர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்து அங்கிருந்து வரவழைக்கப்பட்ட மூன்று தீயணைப்பு வாகனங்கள் கடந்த நான்கு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் குடோனில் இருந்த சுமார் 20 லட்சம் மதிப்பிலான இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி சேதமானது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் குடோன் அமைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பாலான சீட்டுகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் தீ பரவாமல் இருக்க இந்த பகுதியைச் சுற்றியுள்ள டீக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளின் கதவுகள் மற்றும் பூட்டுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர்க்கால அடிப்படையில் உடைத்து உள்ளே புகுந்தது கடையில் இருந்த கேஸ் சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர் இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. மேலும் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காலை வேலைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைகளுக்கு செல்லும் பொது மக்களும் மின்சாரம் இல்லாமல் அவதியுற்று வரும் வாய்ப்பு உள்ளதால் மின் இணைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தக் பிளாஸ்டிக் குடோன் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கடையில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீவிரத்திற்கான முக்கிய காரணம் கடையில் இருந்த சிறிய சிலிண்டர் ஒன்று கசிவு ஏற்பட்டு அதில் தீப்பற்றி இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்டு விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story