புதுகை சந்தைப்பேட்டையில் தீ விபத்து

புதுகை சந்தைப்பேட்டையில் தீ விபத்து

தீ விபத்து

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள பழைய பேப்பர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி அலு வலகம் பின்புறம் உள்ள சந்தைப்பேட்டையில் பழைய இரும்பு கடைகள் மற்றும் வார சந்தை கடைகள் அமைந்துள்ளன. இங்கு பழைய பேப்பர்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. பழைய பேப்பர்கள் தீ பிடித்து எரிந்தன. தகவலறிந்ததும் புதுக்கோட்டை நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் சந்தைப்பேட்டை பகுதிகளில் இருந்த பழைய இரும்பு கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story