தைல மரக்காட்டில் தீ விபத்து !

தைல மரக்காட்டில் தீ விபத்து !

தீ விபத்து

தைல மரக்காட்டில் திடிரென தீ விபத்து ஏற்ப்பட்டது.கால்நடைகளை மேய்த்தவர்கள் புகை பிடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் விட்டுச்சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.
திருமயம்: ராங்கியம் ஊராட்சியை சேர்ந்த பாண்டானி கிராமத்தில் 500 ஏக்கரில் அரசின் மனத் தொட்ட கழகம் சார்பில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் கோடைகாலம் காரணமாக மரங்களில் இருந்து இலைகள் மற்றும் சருகுகள் உதிர்ந்து ஆங்காங்கே குவிந்து கிடந்தன. இதில், தீப்பிடித்தது. காற்றின் வேகத் தால் தீ வேகமாக பரவவே அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுபற்றி வனத்துறை அலுவலர் சுப்பிரமணியன் அளித்த தகவலின்பேரில் திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜ சோழன் தலைமையில் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் கருகி சேதமடைந்தன. வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்தவர்கள் புகை பிடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் விட்டுச்சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதா என்று பனையப்பட்டி போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story