தேவனாம்பட்டு காப்புக்காட்டில் கொளுந்துவிட்டு எரியும் தீ!
காட்டு தீ
தேவனாம்பட்டு காப்புக்காட்டில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள குளத்தின் அருகே மது அருந்திய குடிமகன்கள் புகை பிடித்துவிட்டு காய்ந்து போன புல்லில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். தீ முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story