ஆய்வுப் பணிகள் முழுமையடைந்தவுடன் வெள்ள நிவாரண நிதி அறிவிக்கப்படும்

ஆய்வுப் பணிகள் முழுமையடைந்தவுடன் வெள்ள நிவாரண நிதி அறிவிக்கப்படும்

வெள்ள பாதிப்பு குறித்த ஆய்வு பணிகள் முழுமையாக முடிந்த பின் நிவாரண நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

வெள்ள பாதிப்பு குறித்த ஆய்வு பணிகள் முழுமையாக முடிந்த பின் நிவாரண நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 11.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் கட்டுமான பணியினை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். இது வெறும் கோயில் அல்ல மக்களின் உணர்வு. மக்கள் இதை தீபாவளி போல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய கூட்டணியை பொறுத்த வரை தேசிய தலைமை முடிவெடுக்கும். நீலகிரி தொகுதியில் களப்பணி செய்து வருகிறேன். தேர்தல் நேரத்தில் வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிந்த பின் வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story