செலும்பு வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ.
மேற்கு தொடர்ச்சி மலையின் செலும்பு வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ. காட்டுத்தீயை அனைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி வனச்சரக பகுதிகளான மஞ்சளார் வனப்பகுதி, முருகமலை வனப்பகுதி, செலும்பு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, சோத்துப்பாறை வனப்பகுதி, உள்ளிட்ட ஏழு இடங்களில் காட்டித் தீ பற்றி எரிய துவங்கியது.
இந்த நிலையில் வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் நேற்று மாலை வரை 6 இடங்களில் எரிந்து வந்த காட்டுத்தீ முற்றிலும் அனைத்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் செழும்பு வனப்பகுதியில் மற்றும் காட்டுத் தீ மூன்றாவது நாளாக எரிந்து வருகிறது.
இந்த வனப்பகுதி மிகவும் உயரமான மலைப் பகுதி என்பதால் வணக்காவளர்கள் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் விரைந்து காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது. மேலும் தொடர்ந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காட்டு தீ குறித்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி கூறுகையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றியதால் காட்டுத்தியை கட்டுப்படுத்த பெரும் சவால் ஏற்பட்டதாகவும், தற்பொழுது செலும்பு வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவுக்குள் காட்டுத் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.