தான் படித்த பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய முன்னாள் அமைச்சர்
இலுப்பூரில் சிறுவயதில் தான் படித்த பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இளமைக் காலத்தில் தாம் படித்த பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடிய தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர்! தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான, டாக்டர் .சி. விஜயபாஸ்கர் இன்று இலுப்பூரில் தாம் இளமைக் காலத்தில் பயின்ற பள்ளிக்குச் சென்று கிறிஸ்மஸ் விழா கொண்டாடினார் கேக் வெட்டி குழந்தைகளுக்கு பரிசளித்தார்.
இலுப்பூரில் மிகவும் பிரத்திசி பெற்ற ஆர் .சி. தொடக்கப்பள்ளி கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . இந்த பள்ளியில் தன்னுடைய இளமைக்காலத்தில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாநகர டாக்டர் .சி. விஜயபாஸ்கர் இப்பள்ளியில் படித்தார் இந்நிலையில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு இன்று பள்ளிக்கு நேரில் சென்றார் .அங்கு தான் படித்த வகுப்புகளை பார்வையிட்டார் பின்னர் நடைபெற்ற விழாவில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். பின்னர் குழந்தைகளின் ஆடல் பாடல்களை கண்ட ரசித்தார் இதனையடுத்து குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். மேலும் தன்னுடைய இளமைக்காலத்தில் படித்த பள்ளியை கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் டாக்டர். சி .விஜயபாஸ்கர் தனது பள்ளிக்கு வந்ததை தற்போது படிக்கும் மாணவ, மாணவியர் கைத்தட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகர செயலாளர் சத்யா மணிகண்டன், இலுப்பூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் குரு பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.