தான் படித்த பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கிய முன்னாள் மாணவர்

தான் படித்த பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கிய முன்னாள் மாணவர்

சுப்பிரமணியன்

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் கடந்த 1980 முதல் 1985 ஆண்டுகளில் எலத்தகிரி புனித அந்தோணியர் பள்ளியில் படித்துள்ளார். இந்த நிலையில் தான் படித்த பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கணினி பயன்பாட்டிற்காக ரூ, 5 லட்சம் நிதி உதவியை பங்குதந்தையும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான மார்ட்டின் கிருஸ்துதாசிடம் வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக ரூ, 5 லட்சம் நிதி உதவி வழங்கியதையடுத்து அவருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மார்ட்டின் கிருஸ்துதாஸ் பேசுகையில் மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தற்போது ரூ 5 லட்சம் நிதி உதவி வழங்கிய முன்னாள் மாணவருக்கு நன்றியை தெரிவித்தார். நிதி உதவி வழங்கிய முன்னாள் மாணவர் சுப்பிரமணி பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூறியது போன்று எல்லோரும் வாழ்வில் முன்னேற கனவு காணுங்கள் என்று சென்னார் அதன்படி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார், இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் வில்லியம், முன்னாள் மாவட்டத் தலைவர் நாகராஜ், அரிமா ராமசந்திரன், நகர துணைத்தலைவர் இருதயராஜ், அமல்ராஜ், மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜார்ச் எபினேசர், சார்ச்கில்பட், தேவா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்கள்.

Tags

Next Story