அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு 2515 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வேலுர் மாவட்டம் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2515 விலையில்லா மிதிவண்டிக ளை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நம்முடைய தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கல்வியில் சிறந்து விளங்குகிறது.

தொடர்ந்து கல்வியில் தமிழ்நாடு மாணவ மாணவிகள் சிறந்து விளங்கவும் சாதிக்கும் வகையிலும் அரசின் சார்பில் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம்,விலையில்லா சீருடை,விலையில்லா நோட்டுப் புத்தகம், உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வியில் நம்முடைய மாநிலம் சிறந்து விளங்குவதை போலவே வேலூர் மாவட்டமும் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் மாணவ மாணவிகள் அரசு வழங்கும் திட்டங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கல்வி கற்பதால் சமூகத்தில் உள்ள அறியாமை களைவதிலிருந்து மாணவ,மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல ஆட்சியாளராக, சிறந்த விஞ்ஞானியாக நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார் .

Tags

Next Story