அறந்தாங்கி அருகே இலவச மருத்துவ முகாம்!

அறந்தாங்கி அருகே இலவச மருத்துவ முகாம்!

மருத்துவ முகாம்

அறந்தாங்கி அருகே சேவா டிரஸ்ட் மற்றும் சாரதா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அறந்தாங்கி அருகே ஆவணத் தாங்கோட்டை சுகுராஜ் பள்ளியில் காளியப்பன் கண்ணாம்பாள் சேவா டிரஸ்ட் மற்றும் சாரதா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். டிரஸ்ட் தலைவர் காளியப்பன், ஆசிரியர் சோலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ராஜ்மோகன் வரவேற்றார். முகாமில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆசைசெல்வன், கண் டாக்டர் வினோபிரபா, மகப்பேறு டாக்டர் மலர் விழி, பல் டாக்டர் முத்துகுமரன்,காது மூக்கு தொண்டை சிகிச்சை டாக்டர் ஹரிகரன், ஹோமியோபதி மருத்துவர் கோகுல்தாஸ் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் 300க்கும் மேற்பட்டவர் களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். டிரஸ்ட் உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், தேவராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story