தஞ்சாவூர் அருகே பழ வியாபாரி வெட்டிக் கொலை

தஞ்சாவூர் அருகே பழ வியாபாரி வெட்டிக் கொலை

கோப்பு படம் 

தஞ்சாவூர் அருகே பழ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே வேனில் சென்ற பழ வியாபாரி வெட்டிக்கொல்லப்பட்டார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் அப்பு என்கிற ஹரிஹரன் (26),பழவியாபாரி.

இவர் தனது நண்பரான நீடாமங்கலம் முல்லைவாசல் அக்ரஹாரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜமுருகனுடன் (19) பழம் வாங்க மினி வேனில் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தார். இந்த வேனை நீடாமங்கலம் ஒரத்தூர் வடக்கு தெரு ராஜேந்திரன் மகன் வினோத் (24) ஓட்டினார்.

தஞ்சாவூர் அருகே வல்லம் புறவழிச் சாலையில் சென்ற இந்த மினி வேனை பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் குறுக்கே வந்து மறித்தனர். அப்போது வினோத் முகத்தில் மண்ணைத் தூவிவிட்டு, அவரது முதுகில் அரிவாளால் வெட்டினர். மேலும், இடது ஓரத்தில் உட்கார்ந்திருந்த ஹரிஹரனை அரிவாளால் வெட்டி விட்டு, இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பினர்.

இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராஜமுருகனுக்கு காயம் இல்லை. இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முன் விரோதம் காரணமாக ஹரிஹரன் கொல்லப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Tags

Next Story