குமரி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

குமரி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
குமரி அறக்கட்டளை விழா
குமரி அறக்கட்டளையின் 6 வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாராத்தான் போட்டி மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குமரி அறக்கட்டளையின் 6 வது ஆண்டு விழாவையொட்டி இரத்ததானம் &போதை விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் விரிகோட்டிலிருந்து கருங்கல் வரை நடந்தது. இதை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார். நடந்தது. ஓட்டப்போட்டியில் குமரி,நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாலையில் கருங்கல் சந்தை திடலில் வைத்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் குமரி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் 2 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகட்டணமாக தலா 20 ஆmரம் ரூபாய், நோயாளி ஒருவருக்கு வீல் செயர் மற்றும் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் குழிவிளை விஜயகுமார்,குமரி அறக்கட்டளை பணியாளா்கள், தன்னார்வலர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி அறக்கட்டளை பணியாளர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story