ஆத்தூரில் ஆபத்தான நிலையில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டிடம்

ஆத்தூரில் ஆபத்தான நிலையில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டிடம்
ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்
ஆத்தூரில் நகராட்சி கிணற்றில் சுற்று சுவர் இடிந்து விழுவதால் ஆபத்தான நிலையில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்க கோரி குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டு ராஜாஜி காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பொதுகிணறு உள்ளது.இந்த கிணற்றில் தெற்கு சுவற்றின் ஒட்டி கடந்த 2010 ஆம் ஆண்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அங்கன்வாடி மையத்தில் தற்போது 15 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இது தவிர கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் சில நாட்களாக கிணற்றின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்தச் சூட்டின் மீதுள்ள அங்கன்வாடி மையம் தற்போது ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருவதாகவும் கிணற்றின் சுற்றுச்சூவர் பகுதியைசீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமாலிடம் கேட்ட போது; இடத்தை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Tags

Next Story