வேலி தாண்டும் இறுதி ஊர்வலம்
வேலி தாண்டி இறந்தவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
வடமதுரை இறுதி ஊர்வலத்திற்காக மாமூல் பாதை என தனியார் இடம் வழியே செல்ல இரும்பு கம்பி வேலியை தாண்டி செல்லும் வினோதம் தொடர்கிறது.புத்துார் பிச்சம்பட்டி கிராமத்தினர் இறுதி ஊர்வலத்திற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதையில் 100 மீட்டர் துாரம் தனியார் இடத்தில் இருந்தது. சில மாதங்களுக்கு முன் இடத்தின் உரிமையாளர் இரும்பு கம்பி வேலி அமைத்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மூக்கன் இயற்கை மரணமடைந்தார். கிராமத்திலிருந்து மயானம் வரை செல்ல முறையான தார் ரோடு வசதி உள்ளது. இருந்தும் கிராமத்தினர் பாரம்பரிய வழி என தனியார் இடம் வழியே செல்வதில் பிடிவாதமாக உள்ளனர்.இங்கு தனியார் இடத்தில் வேலி அமைந்தபின் இவ்வாறு வினோதமாக இறுதி ஊர்வலம் செல்வது 2வது முறையாகும்.
Tags
Next Story