சங்கரய்யாவின் புகழஞ்சலி கூட்டம்
புகழஞ்சலி கூட்டம்
சுதந்திர போராட்ட தியாகியும், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கான புகழஞ்சலி கூட்டம் சிபிஎம் கட்சி சார்பில் அரியலூர் திருச்சி சாலையில் உள்ள மேரீஸ் மகாலில் இன்று நடைப்பெற்றது அக்கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் வாலண்டினா கலந்துகொண்டு சங்கர்ய்யாவின் திருவுறுவ படத்தினை திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து அவரது புகழை பற்றியும், அவர் ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகள் குறித்தும், போராட்ட குணம் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
இதனையடுத்து தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் பகுதிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இதில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.