இன்டியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

இன்டியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

செயல் வீரர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இன்டியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இந்த தேர்தலை ஒட்டி தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி மீண்டும் போட்டியிடுகிறார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த செயல்களில் கூட்டத்திற்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி இந்தியா கூட்டத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் அனைவரும் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தமிழகத்தில் இந்தியாவிலேயே கூட்டணியில் குழப்பம் இல்லாமல் அமைத்த மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்றார். மேலும் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் அந்த அந்த தொகுதிகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளில் வெற்றி பெறும் என்றார்.

மேலும் தேர்தலுக்குப் பின்னர் இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்பதை திமுக தலைவர் மு க ஸ்டாலின் முடிவு செய்வார் என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நம்முடன் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறார் எனவும் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்ற அதேபோல் மிகவும் பழகுவதற்கு இனிமையான மனிதன் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story