அதிமுக வெற்றியை குறிக்கும் மக்கள் கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் அதிமுக வெற்றி குறிக்கிறது சிலர் 2024 பிறகு அதிமுக இருக்காது என்று கூறுகின்றனர் ஜூன் நான்காம் தேதி யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி தெய்வமாக நின்று அவர்கள் காத்து வருவதால் இது தெய்வப் சக்தி கொண்ட கட்சி இதை அழிக்கவும் உடைக்கவும் யாராவது முயன்றால் அவர்கள் காற்றோடு காணாமல் போய்விடுவார்கள்.
2 கோடியே 6 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக இதை சீண்டிப்பாக்காதீர்கள் சீண்டிப் பார்த்தவர்கள் தொலைந்து போவார்கள் அதிமுக சட்டமன்றத்திலும் பொதுக்கூட்டத்திலும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இல்ல தரச்சிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தது அதிலும் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் என்று கூறிய தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக 2 கோடியே 15 லட்சம் பேருக்கு தருவேன் என்று கூறி தற்பொழுது ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு தருகிறோம் என்று கூறுகின்றனர் ஆனால் கிடைப்பது 70 லட்சம் மகளிருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைக்கின்றது.
இதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தி புதிய வீடு கட்டுபவர்கள் பென்ஷன் வானுக்கு வருவதற்கு நிறுத்தி வைக்க ஏற்பாடு நடத்து ஏமாற்று கட்சியாக திமுக உள்ளது அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் இல்ல பயணம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக தற்பொழுது முன்னும் பின்னும் பெயிண்ட் அடித்த பஸ்களில் மட்டுமே கட்டணமில்லா பேருந்து என்று மகளிரை ஏமாற்றியுள்ளது திமுக தேர்தலுக்கு முன்னர் உருவாக்குருதி தேர்தலுக்குப் பின்னர் ஒரு திட்டம் என இரட்டை நிலைப்பாடு கொண்ட இரட்டை வேடம் போடும் கட்சியாக உள்ளது சைக்கிளில் சென்றது வாக்கிங் சென்றது ஆகியவை மட்டுமே திமுகவின் மூன்றாண்டு சாதனையாக உள்ளது தமிழகத்தில் தற்பொழுது அரிசியின் விலை 18 ரூபாய் உயர்ந்துள்ளது அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உயர்வு வேலையில்லா திண்டாட்டம் வறட்சி வருமானம் குறைவு ஆகியவை பற்றி ஸ்டாலின் கவலைப்படவில்லை தனது குடும்பத்தை பற்றியும் தனது மகனின் பட நிலைப்பாடு குறித்து மட்டுமே கவலைப்படுகின்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
தமிழகத்தில் தினந்தோறும் கொலை பாலியல் வன்கொடுமை திருட்டு போதை அரசு என சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட அரசாக திமுக அரசு உள்ளது கஞ்சா இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு தமிழகத்தில் குடும்பங்கள் சீரழிந்து வருகிறது 2019-ல் ராகுல் பிரதமர் என்று ஸ்டாலின் கூறியதற்கு பின்னர் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் போய்விட்டது. ஒரு ராசி இல்லாத ஸ்டாலின் தற்பொழுது தனது செல்வாக்கை இழந்து விட்டதால் இந்தியா கூட்டணி என்ற அமைப்பை முன்னிலைப்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்கிறார் .
பாஜக கூட்டணியில் அதிமுக இருந்த வரை மக்கள் நலனுக்காக கொண்டு வரும் திட்டங்களை பாராட்டியும் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்தும் ஒரு துணிச்சலான கட்சியாக இருந்தது ஆனால் ஸ்டாலின் மோடியை எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கோபேக் என்று கூறியும் ஆளுங்கட்சியாக இருந்தபோது வெல்கம் மோடி என்றும் கூறி ஒரு கோழையாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் தற்போதைய தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம் என்று நினைத்த ஸ்டாலின் அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்பதால் ஷாக் அடித்தார் போல் உள்ளார்