பட்டாசில் இஸ்ரோ ராக்கெட் வடிவமைத்த தங்க நகை பட்டறை தொழிலாளி.

பட்டாசில்  இஸ்ரோ ராக்கெட் வடிவமைத்த தங்க நகை பட்டறை தொழிலாளி.

பட்டாசில் இஸ்ரோ ராக்கெட்

கோவையை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி பட்டாசுகளை கொண்டு இஸ்ரோ ராக்கெட்டை வடிவமைத்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா. அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.தங்கத்தில் கிரிக்கெட் பேட், உலக கோப்பை,பல்வேறு அரசியல் தலைவர்களின் சிற்பம் என பல்வேறு சிற்பங்கள் வடிவமைத்து உள்ளார்.தற்போது இஸ்ரோ ராக்கெட் வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டதை கொண்டாடும் வகையில் புஸ்வானம்,லட்சுமி வெடி,சாட்டை,பென்சில் பட்டாசு,ரோல் கேப்,சிவப்பு வெடி உள்ளிட்ட பட்டாசுகளை கொண்டு இஸ்ரோ ராக்கெட் போன்று வடிவமைத்துள்ளார். இஸ்ரோவின் வெற்றி தீபாவளி வெற்றியாக கொண்டாடும் வகையிப இதனை வடிவமைத்ததாக ராஜா தெரிவித்தார்.
Next Story