சேலம் அருகே 1½ வயது சிறுமிக்கு தங்கப்பதக்கம்

சேலம் அருகே 1½ வயது சிறுமிக்கு தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம் வென்ற சிறுமி

சேலம் அருகே 1½ வயது சிறுமிக்கு தங்கப்பதக்கம்உலக சாதனைக்கான சான்றும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த மணிகண்டன்- ஐஸ்வர்யா தம்பதியின் மகள் ஆத்விகா. 1½ வயதான இவள், படங்களை பார்த்து அதன் பெயர்களை சொல்வதில் சாதனை படைத்துள்ளாள். அதற்காக இந்திய உலக சாதனை மையம் சிறுமி ஆத்விகாவுக்கு, உலக சாதனைக்கான சான்றும், தங்கப்பதக்கம் வழங்கி உள்ளது.

அந்த சாதனை புத்தகத்திலும் ஆத்விகா பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த சிறுமிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சாதனை குறித்து சிறுமியின் தாய் ஐஸ்வர்யா கூறுகையில், எங்களது சொந்த ஊர் கரூர் மாவட்டம் காந்திகிராமம்.

என்னுடைய மகள் ஆத்விகா 8 மாதத்தில் இருந்தே படங்களை பார்த்து அதனை அடையாளம் காணும் பயிற்சியை சொல்லி கொடுத்தேன். பேச தொடங்கிய பிறகு படங்களை பார்த்து அதன் பெயர்களை கூறுவாள். 30 நாட்டின் கொடி, மனித உள் உறுப்புகள், தேசிய தலைவர்கள், தேசிய சின்னம், உலக அதிசயங்கள், விலங்குகள், வடிவங்கள், பல்வேறு நிறுவன லோகோ, சூரிய குடும்பம், வார நாட்கள் உள்ளிட்டவற்றை சொல்வாள்.

அவளது வீடியோவை இணையதளத்தில் அப்டேட் செய்தோம். அதனை பார்த்த புதுடெல்லியில் உள்ள இந்திய உலக சாதனை மையம் எங்களது குழந்தைக்கு உலக சாதனைக்கான சான்றும், தங்கப்பதக்கமும் வழங்கி உள்ளது என்றார்.

Tags

Next Story