அரசு பேருந்து - அதிவேகமாக பின்னல் வந்த பிக்கப்வேன் மோதி விபத்து!

அரசு பேருந்து - அதிவேகமாக பின்னல் வந்த பிக்கப்வேன் மோதி விபத்து!

 விபத்து

ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து! அதிவேகமாக பின்னல் வந்த பிக்கப்வேன் மோதி விபத்து ஏற்ப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து! அதிவேகமாக பின்னல் வந்த பிக்கப்வேன் மோதி விபத்து! குருபவானிகுண்டா பகுதியில் இருந்து அரசு பேருந்தை அசோக்குமார் என்ற ஓட்டுநர் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு ஓட்டி வந்தார்.

அப்போது ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்ற பேருந்தை நிறுத்திய போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேவரள்ளி பகுதியில் சேர்ந்த கார்த்திக் வயது 31 மற்றும் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த காளியப்பன் வயது 75 இருவரும் ஆகிய இருவரும் பிக்கப் வேனில் வேலூரில் இருந்து மாங்காய் லோடுகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர் அப்போது கார்த்திக் பிக்கப் வேனை அதிவேகமாக ஓட்டி வந்தார் அப்போது ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை அதி வேகமாக மோதினார்.

இந்த நிலையில் பிக்கப் வேனில் பயணித்த காளியப்பனுக்கு கை உடைந்தது இதனால் அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

மேலும் பிக்கப் வேன் அரசு பேருந்து மீது மோதிய காட்சி அருகில் இருந்த டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிக்கப் வேனை காவல் நிலையம் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story