குமாரபாளையம் அருகே மண் குவியலில் அரசு பஸ்  ஒன்று பாய்ந்து நின்றது

குமாரபாளையம் அருகே மண் குவியலில் அரசு பஸ்  ஒன்று பாய்ந்து நின்றது

மண்ணில் சிக்கிய பேருந்து

குமாரபாளையம் அருகே மண் குவியலில் அரசு பஸ்  ஒன்று பாய்ந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு, எஸ்.எஸ்.எம் கல்லூரி அருகே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. அதற்காக இரு மாதங்கள் முன்பு பணிகள் துவங்கியது. டிச. 8 முதல் புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.

கத்தேரி பிரிவு, சர்வீஸ் சாலையில் திருப்பி விடும் இடத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் சேலத்திலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று, எச்சரிக்கை விளக்கு, தடுப்புகள் தாண்டி, மண் குவியலில் பாய்ந்து நின்றது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அரசு பஸ் ஓட்டுனரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். எச்சரிக்கை பலகைகளை பல கி.மீ. தூரம் முன்பு இருந்து, ஓட்டுனர்கள் பார்வையில் படும்படி, பெரிய அளவில் வைக்க வேண்டும். சர்வீஸ் சாலை பிரிவு அருகே ஆட்கள் வேலை செய்கிறார்கள்,

சர்வீஸ் சாலையில் செல்லவும் என வைத்தால், வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இது போல் விபத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த பாலம் கட்டும் இடம் முன்பாக பல கி.மீ. தூரம் முன்பாக இருந்து, இரு புறமும், பெரிய அளவிலான போர்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் இந்த இடம் அறிந்திடும் வகையில், பல கி.மீ. தூரம் அதிக விளக்குகள் அமைக்க வேண்டும்.

Tags

Next Story