திங்கள்நகர் அருகே அரசு பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து

திங்கள்நகர் அருகே அரசு பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து
விபத்தான பேருந்து 
திங்கள்நகர் அருகே அரசு பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது.

குமரி மாவட்டம் திங்கள்நகர் அடுத்த பாளையம் - கொல்லாய் பகுதியில் வைத்து நேற்று மாலை மேல்மிடாலம் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்ல அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பாரம் ஏற்றிவந்த டாரஸ் லாறியினை டிரைவர் ரோட்டின் வலதுபுறம் ஏறிவந்ததாக கூறபடுகிறது.

இதனால் கட்டுபாட்டை இழந்த அரசு பஸ் டாறஸ் லாறி மீது மோதமல் இருக்க அரசு பஸ் டிரைவர் முயன்ற போது, ரோட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு எந்த காயங்களும் இல்லாமலும். அதேசமயம் அரசு பஸ் விபத்துக்குள்ளானதில் மின்சாரம் செல்லும் கம்பிகள் பஸ் மீது விழாமல் அந்தரத்தில் நின்றதால் உயிர்சேதங்கள் தவிர்கபட்டன.

இந்த விபத்தில் பேருந்தின் முன் பக்க கண்ணாடிகள் முழுவதும் உடைந்து ரோட்டில் சிதறி கிடந்தன. உடனே சம்பவ இடம் வந்த இரணியல் காவல்துறை உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றார் .

Tags

Read MoreRead Less
Next Story