நாகர்கோவிலில் ஓடையில் சிக்கி பஞ்சரான அரசு பஸ்

நாகர்கோவிலில் ஓடையில் சிக்கி பஞ்சரான அரசு பஸ்
ஒடையில் சிக்கிய பஸ்
நாகர்கோவிலில் ஓடையில் சிக்கி பஞ்சரான அரசு பஸ்ஸால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினாசேரி பகுதியில் ரெட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை செல்லும் அனைத்து வாகனங்களும் அங்கிருந்து நாகர்கோவில் வரும் வாகனங்கள் அசம்பு ரோடு, புத்தேரி மேம்பாலம், நான்கு வழி சாலைகள் வழியாக செல்கின்றன. அசம்பு ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ் கடுமையான போக்குவரத்து நெருக்கடி சிக்கி, சாலையின் ஓரத்தில் சாக்கடை ஓடை மீது போடப்பட்டிருந்த காங்கிரிட் ஸ்லாப் மீது பஸ் ஏறியது.

இதில் பஸ்ஸின் எடை தாங்காது ஸ்லாப் திடீரென உடைந்து முன்பக்க சக்கரம் சாக்கடை ஓடையில் இறங்கியது. அதோடு அந்த டயரும் பஞ்சரானது. பஸ்ஸை மீட்க முடியவில்லை. இதனால் வாகனங்கள் இருபுறமும் அணி வகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீராகும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் பஸ் மீட்கப்பட்டது.

Tags

Next Story