மல்லசமுத்திரத்தில் சாலையில் அரசுப்பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

மல்லசமுத்திரத்தில் சாலையில் அரசுப்பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் நின்ற பேருந்து

மல்லசமுத்திரத்தில் நடுரோட்டில் நின்ற அரசுபேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் மாற்றிவிடப்பட்டது.

ராசிபுரத்தில் இருந்து மொஞ்சனூர் வழியாக காளிப்பட்டிக்கு 10ம்நெம்பர் அரசு பேருந்து சென்றுகொள்டுள்ளது. நேற்று மதியம் 12மணியளவில், காளிப்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, மல்லசமுத்திரம் பேருந்துநிலையம் அருகில் வரும்போது இந்த பேருந்து திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது.

இதனால், சேலம்– திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மல்லசமுத்திரம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து, கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை மாமுண்டி வழியாக மாற்றிவிட்டனர். மாற்று பேருந்து மூலமாக பயணிகள் சென்றனர்.

ஜே.சி.பி.,இயந்திரத்தில் கயிற்றைகட்டி பேருந்தை மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்திற்குள் எடுத்துசென்று பழுதை சரிசெய்தனர். இதனால், சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story