நாகர்கோவிலில் இரவில் அரசு பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது - 13 பேர் காயம்
நாகர்கோவிலில் இரவில் அரசு பஸ் தடுப்புச் சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்து 13 பேர் காயம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து அரசு பஸ் இன்று நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் வைத்து பஸ் திடீரென சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பஸ் கவிழ்ந்தது. பயணிகள் அலறித் துடித்தனர். பஸ்ஸிலிருந்து டீசல் கசிந்தது. இதனால் தீ விபத்து ஏற்படும் என்ற பயத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு பஸ்ஸில் இருந்து அனைவரும் மீட்க்கப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story