மலைச்சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்

மலைச்சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்

பழுதாகி நின்ற அரசு பஸ்

கொடைக்கானல் தடியன்குடிசையில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து சித்தரேவு. பெரும்பாறை, ஆடலூர், பன்றிமலை நோக்கி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வத்தலக்குண்டு டெப்போவில் இருந்து 6.15 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் தடியன்குடிசை அருகே வந்தபோது திடீரென பழுதாகி நடு வழியில் நின்றது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பஸ் அதே இடத்தில் நின்றதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பஸ்சில்தான் கூலித்தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் செல்கின்றனர். பழுதடைந்த பஸ் இயக்கப்படுவதால் அடிக்கடி நடுவழியல் பழுதாகி நிற்பது தொடர் கதையாக உள்ளது. தற்போது தேர்வு நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் இந்த அரசு பஸ்சில்தான் சென்று வருகின்றனர். இன்று காலை இயக்கப்பட்ட அரசு பஸ் பழுதாகி நின்றதால் மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாகினர். பலர் மாற்று வாகனங்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஒருசிலர் நீண்ட தூரம் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே போக்குவரத்து அரசு கழக அதிகாரிகள் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை தரமான முறையில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story