ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து!

ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து!

நீதிமன்றம் 

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டியைச் சேர்ந்தவா் கா்ணன். கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு பழனி கொழுமம் சாலையில் இருச் சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். இதையடுத்து, இழப்பீடு வழங்க கோரி கா்ணனின் மனைவி முருகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனு அளித்தாா். இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 2021ஆம் ஆண்டு திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2023-ஆம் ஆண்டு ரூ.10 லட்சத்தை மட்டும் இழப்பீட்டுத் தொகையாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்கியது. மீதமுள்ள ரூ.6 லட்சத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குவதாக தெரிவித்தது.

Tags

Next Story