ஒசூரில் புகை மண்டலத்தால் சூழ்ந்த அரசு மருத்துவமனை

ஒசூரில் புகை மண்டலத்தால் சூழ்ந்த அரசு மருத்துவமனை

அனுமதியின்றி நடைபெறும் பணிகள்

ஒசூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பின்றி போர்வெல் அமைக்கும் பணியால் புகை மண்டலமாக மாறிய . மருத்துவமனை,நோயாளிகள் அவதிக்குள்ளகினர்.

ஒசூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பின்றி போர்வெல் அமைக்கும் பணியால் புகை மண்டலமாக மாறிய . மருத்துவமனை,நோயாளிகள் அவதி ஒசூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு பாதுகாப்பின்றி ஆழ்த்துளை போர் அமைக்கும் பணியின் போது புகை மண்டலமாக மாறியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தற்போது வறட்சியின் காரணமாக குடீநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் ஒசூர் அரசு தலைமை மருத்துவனையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஒசூர் அரசு தலைமை மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனையை போக்க இன்று மாலை அவசரசிகிச்சை பிரிவு முன்பு ஆழ்த்துளை (போர்வெல்) அமைக்கும் பணி நடந்தது வருகிறது . எந்த ஒரு பாதுகாப்பின்றி போர் போட்டு வருவதால் , மருத்துவமனை வளாகம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது ,நோயாளிகளின் உடைகள், உடைமைகள்,

படுக்கைகள் தூசி படந்தது. அதே போல் அமர்ந்து சாப்பிட முடியாமல் நோயாளிகளின் உடன் வந்தவர்கள் அவதியடைந்தனர் இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்த போது, மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனையை போக்க ஆழ்த்துளை கிணறு அமைப்பது நல்லது தான், ஆனால் நோயளிகள் தங்கி உள்ள அறைகளில் உள்ள ஜன்னல்கள், கட்டிடங்களுக்கு தார் பாய் போன்று மூடிவிட்டு தூசி வெளியில் போகாத வாரு ஆழ்த்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு இருக்கலாம்.

எந்த ஒரு பாதுகாப்பின்றி ஆழ்துளை கிணறு போடுகின்றனர். மண் புகை பறக்காமல் இருக்க போர் போடும் போது அவ்வப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும் அதுவும் செய்யவில்லை. இதனால் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வார்டு முழுவதும் தூசி படர்ந்து காணப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள ஆஸ்துமா, சுவாச நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதியடைந்தனர்.

Tags

Next Story