பிரம்மாண்டமாக நடைபெற்ற முளைப்பாரிகை ஊர்வலம்

நல்லம்பள்ளியில் மாரியம்மன் கோவில் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரிக்கை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளியிலிருந்து சிவாஜி செல்லும் பகுதியில் வன்னியர் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வ கணபதி, அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு ஊர் முனியப்பன், அருள்மிகு பழனியாண்டவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை 3 மணியளவில் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்து மாரியம்மன் கோவிலுக்கு முளைப்பாரிகை ஊர்வலம் பம்பை மேளதாளங்களுடன் பட்டாசுகள் வெடித்து விமர்சையாக நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story