திண்டுக்கல் அருகே மாபெரும் மீன்பிடித் திருவிழா

திண்டுக்கல் அருகே மாபெரும் மீன்பிடித் திருவிழா
திண்டுக்கல் அருகே நடந்த மீன் பிடி திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று ஏராளமான மீன்களைப்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் அருகே செல்லம்மன்தாடி குளத்தில் கன்னிமார் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாபெரும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ அளவுள்ள ஜிலேபிமீன், கட்லா மீன், துள்கெண்டை ,விராமீன் உள்ளிட்ட மீன் வகைகளை அறிவலையில் பிடித்தனர் .

இதற்கு நெட்வலை, பரி உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு ஏராளமான மீன்களை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிடித்து சென்றனர். கண்மாய் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு,

பின்பு இந்தாண்டு நிரம்பி உள்ளது.முன்னதாக கன்னிமார் கோவிலுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பூசாரி பிரசாதம் வழங்கிய பின்பு பச்சை கொடி காட்டப்பட்டு மீன்பிடிக்க அனைவரும் கண்மாய்க்குள் இறங்கினர். பின்பு அரை மணி நேரத்தில் மீன்பிடித்த மகிழ்ச்சிகள் பொதுமக்கள் வெளியே வந்தனர்.

Tags

Next Story