குழந்தை இல்லாத ஏக்கத்தில் மளிகை கடைக்காரர் தற்கொலை
காவல் நிலையம்
வடக்கு காந்திகிராமத்தில்,திருமணமாகி 30 வருடங்களாகியும் குழந்தை இல்லாத விரக்தியில் மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வடக்கு காந்திகிராமம், ராஜா நகரில் உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 50. இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கும் இவரது மனைவி சித்ரா வயது 45 என்பவருக்கும் திருமணமாகி 30 வருடங்களாகியும் குழந்தை இல்லை. இதனால் விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த ஆறுமுகம், ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணிக்கு, தனது மளிகை கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அறிந்த ஆறுமுகத்தின் மனைவி சித்ரா அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story