குண்டுபட்டி பகுதியில் மளிகை கடைக்காரருக்கு கத்தி குத்து
பைல் படம்
கொடைக்கானல் மேல்மலை விடுதலை நகர் குண்டுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் விஜயக்குமார். இதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த 6ம் தேதி இதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (71) என்பவர், இவர்களது கடையில மளிகை பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர் வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லத்துரை, அவரது மகன் முத்துப்பாண்டி (37) ஆகியோர் விஜயகுமாரின் மளிகை கடைக்கு சென்று பொருட்களை கேட்டுள்ளனர். ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்து, செல்லத்துரை தகராறு செய்துள்ளதால் பொருட்கள் தர விஜயகுமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லத்துரை கத்தியை எடுத்து விஜயகுமாரை குத்தினார். முத்துப்பாண்டியும் அவரை தாக்கியுள்ளார்.