காளியம்மனுக்கு சீர் கொண்டு சென்ற மகளிர் குழு

காளியம்மனுக்கு சீர் கொண்டு சென்ற மகளிர் குழு

சீர் கொண்டு சென்ற மகளிர் குழுவினர்

குமாரபாளையம் காளியம்மனுக்கு மகளிர் குழுவினர் சீர் கொண்டு சென்றனர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஒரு கோவில் கும்பாபிஷேகம் என்றால் மற்ற கோவில்கள் சார்பில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் கும்பாபிஷேகம் நடந்த கோவிலுக்கு சீர் கொண்டு வந்து தருவது வழக்கம்.

அது போல் காளியம்மன் கோவிலுக்கு பல்வேறு கோயில் தரப்பில் சீர் கொண்டு வரும் நிகழ்வில் ஒரு கட்டமாக ராஜா வீதி அரசமரத்து பிள்ளையார் மகளிர் குழு சார்பில் காளியம்மனுக்கு சீர் கொண்டு வரப்பட்டது. குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் துவங்கிய சீர் தட்டுக்களை சுமந்தவாறு வந்த மகளிர் அணி ஊர்வலம், தம்மண்ணன் வீதி, புத்தர் வீதி, கலைமகள் வீதி, ராஜா வீதி வழியாக காளியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story