தடுப்புச்சுவற்றின் மீது கனரக லாரி மோதி விபத்து
தடுப்புச்சுவற்றின் மீது கனரக லாரி மோதி விபத்து
சாலையில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவற்றில் கனரக லாரி மோதி விபத்து.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பிரானூா் பாா்டரில் சாலையில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவற்றில் கனரக லாரி மோதி விபத்திற்குள்ளானது.தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிலிருந்து கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு செல்கிறது. செங்கோட்டை பிரானூா் பாா்டா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை கனிமவளங்களை ஏற்றி வந்த லாரி அதிவேகத்தில் வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மேல் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இயற்கை வள பாதுகாப்பு நலச்சங்கம் பொதுச் செயலா் ஜமீன் கூறியதாவது,கேரளாவில் பள்ளிக்கூட நேரங்களில் கனரக வாகனங்கள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் நேரங்களில் எண்ணற்ற வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகிறது.பள்ளி சமயங்களில் வாகன கட்டுப்பாடு வேண்டும் என்ற கோரிக்கையினை ஆட்சியரிடம் அளித்துள்ளோம். அரசுநடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆங்காங்கே கனக ரக லாரிகளை சிறை பிடித்து பொதுமக்களை திரட்டி மாபெரும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
Next Story