விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை கூட்டம்

விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை கூட்டம்

யானை கூட்டம்

விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை கூட்டம்
விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை கூட்டம் தாளவாடி அருகே விவசாய நிலங்களில் யானை கூட்டம் சுற்றித்திரிவதால் கிராம மக்கள், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். சத்தி புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த யானைகள் உணவுக்காக காட்டை விட்டு வெளியேறி கிராமப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றித்திரிவதோடு இவைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தாளவாடி ஸ்டேஷன் நகர் தமிழ்நாடு அரசு மதுபானக்கடை அருகில் உள்ள மல்லு என்பவருக்கு சொந்தமான கரும்பு காட்டில் நேற்று முன்தினம் நான்கு காட்டு யானைகள் கரும்பை சுவைத்து தின்று கொண்டு வெளியேறாமல் கரும்பு பயிர்களை நாசம் செய்து கொண்டு கரும்புத் தோட்டத்தினுள் தஞ்சம் புகுந்துள்ளது. யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் போலீஸார் யானைகளை விரட்ட போராடி வருகிறார்கள். யானை வெளியேறாமல் கரும்பு தோட்டத்தில் தஞ்சம் அடைந்துள்ளது. யானை கூட்டம் சுற்றித்திரிவதால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story