பார் ஆக மாறிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

பார் ஆக மாறிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 

காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம், திருப்பருத்திக்குன்றம் சாலையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்பாக, 300க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. இந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில், மோசமாக இருப்பதால், அனைத்து வீடுகளையும் இடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவு செய்து, ஓராண்டிற்கு முன்பாகவே காலி செய்ய நோட்டீஸ் வழங்கிவிட்டது. பெரும்பாலானோர் காலி செய்த நிலையில், ஒரு சிலர் இன்னும் பாழடைந்த வீடுகளில் வசித்து வருகின்றனர். காலியாக உள்ள பெரும்பாலான வீடுகளில், இரவு நேரத்தில் சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதாக, பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். மது அருந்தும் இடமாகவே இந்த குடியிருப்புகள் மாறிவிட்டதாக பலரும் தெரிவிக்கின்றனர். மேலும், பல வகையான சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர். காஞ்சி தாலுகா போலீசார் இரவு நேரத்தில், இந்த குடியிருப்புகளில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசரிடம் கேட்டபோது, ''சட்டவிரோத செயல் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.



Tags

Next Story