விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி

விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி

கோரிக்கை பேரணி

விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் இந்தோனேசியா,மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து தமிழ்நாட்டின் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார், மாநில செயலாளர் சட்ட விழிப்புணர்வு அணியை சேர்ந்த இரா சதீஷ்குமார், மாநில செயலாளர் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த கோபாலகிருஷ்நனன், விவசாயிகள் இயக்கம் கருணாமூர்த்தி தமிழக விவசாயிகளிடம் தேங்காய் பருப்பு நிலக்கடலை கொள்முதல் செய்து அதில் கிடைக்கும் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் மலேசியா, இந்தோனேசியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்த பாமாயிலை கொள்முதல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story