பெரம்பலூர் : மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் : மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 204 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டிசம்பர் 23 தேதி நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், வேலைவாய்ப்பிற்கான ஆணைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, படித்த மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது என்பதால் தமிழக அரசு மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் வேலைவாய்ப்புத்துறை மூலமாக தனியார் நிறுவனங்களை அழைத்து இதுபோன்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10,000 காலிப்பணியிடங்களுடன் 83 நிறுவனங்கள் பங்குபெற்றது. 1,837 வேலை நாடுநர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 204 வேலைநாடுநர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 400 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுயதொழில் தொடங்குவதற்காக மாவட்ட தொழில் மையம், தாட்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சார்பில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

எந்தவொரு மாணவ, மாணவியும் படிப்பு முடிந்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களுடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லது. இதில் தேர்வு செய்யபட்ட வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், மேலும் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 204 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் கற்பகம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழங்கினார்கள், இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மீனா அண்ணாதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இராதாகிருஷ்ணன், கிறிஸ்டியன் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் மேலாண் தலைவர் முனைவர் கிறிஸ்டோபர், செயலர் மித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story