கிளி ஜோதிடத்தை ஆர்வமுடன் பார்த்த கலெக்டர்

காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, கிளி ஜோதிடத்தை கலெக்டர் தங்கவேல் வெகுவாக ரசித்தார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட காணியாளம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவில் தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும் போட்டிகளும் நடைபெற்றது. இதில் ஒரு அங்கமாக நமது முன்னோர்கள் எதிர்காலம் குறித்து அறிய விரும்பும் கிளி ஜோசியம் பார்க்கும் நிகழ்வும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது கிளி ஜோசியரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு பல்வேறு அட்டைகளை எடுத்து முன் வைத்தது. இதனைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் காணியாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர் ஒருவருக்கு ஜோசியம் பார்க்குமாறு கூறினார்.

அப்போது கிளி ஒவ்வொரு சீட்டாக எடுத்து வெளியே வைத்துவிட்டு இறுதியாக ஒரு சீட்டை ஜோசியம் முன்பு வைத்து விட்டு சென்றது. அந்த சீட்டை வைத்து ஊர் முக்கியஸ்தருக்கு ஜோதிட பலன்களை எடுத்துக் கூறினார் ஜோசியர். பின்னர் ஜோசியருக்கு தர்ஷனை கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சிறு தொகை ஒன்றை கொடுத்து ஜோசியம் பார்க்கும் நிகழ்வை நிறைவு செய்தார். இந்த நிகழ்வு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு சுவாரசிய நிகழ்வாக இருந்தது.

Tags

Next Story