வெள்ளக்கோவிலில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.6க்கு கொள்முதல்

வெள்ளக்கோவிலில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.6க்கு கொள்முதல்

முருங்கைக்காய்

வெள்ளகோவில் பகுதியில் விளைச்சல் அதிகமானதால் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூபாய் 6 க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், மூலனூர், தாராபுரம் பகுதியில் முருங்கைக்காய் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

அதன்படி வெள்ளகோவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக் காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி வெள்ளகோவில் கொள்முதல் நிலையம் செயல்பட்டது.

இந்த கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த முருங்கை காய்களை வாங்குவதற்கு முத்தூர் ,வெள்ளகோவில், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ 8 க்கும் ,மரம் முருங்கை ரூ.6க்கும், கரும்பு முருங்கை ரூப் 12க்கும் கொள்முதல் செய்தனர்.

கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் மதுரை, கோவை ஆகிய பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தினசரி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 7டன் முருங்கை கொள்முதல் செய்யப்பட்டது. விளைச்சல் அதிகமான நிலையில் முருங்கைக்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story