பச்சை மிளகாய் கிலோ ரூ. 24

பச்சை மிளகாய் கிலோ ரூ. 24

தர்மபுரி மாவட்டத்தில் பச்சை மிளகாய் அறுவடை தொடங்கிய நிலையில், உழவர் சந்தையில் கிலோ ரூ.24க்கு விற்பனை செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் பச்சை மிளகாய் அறுவடை தொடங்கிய நிலையில், உழவர் சந்தையில் கிலோ ரூ.24க்கு விற்பனை செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் பச்சை மிளகாய் அறுவடை தொடங்கிய நிலையில், உழவர் சந்தையில் கிலோ ரூ.24க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 950 ஏக்கரில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம், ஏரியூர், அதகப்பாடி, காரிமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, பெரும்பாலை, வாழைத்தோட்டம், பெல்ரம்பட்டி,ஜிங்கேரி, கோடுப்பட்டி, இண்டமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பச்சைமிளகாய் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மிளகாய், காரத்தன்மை கொண்டு ருசியானது. இதனால் வெளியூர்களில் நல்ல வரவேற்பு உள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சென்னை கோயம்பேடு, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மார்க்கெட்டுக்களுக்கு தர்மபுரி மாவட்ட பச்சைமிளகாய் விற்பனைக்கு செல்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விளைச்சல் இல்லாத நேரத்தில், வத்தலககுண்டு, களக்காடு, தேனிபோன்ற இடங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பச்சைமிளகாய் அறுவடை நடந்து வருகிறது. கடந்த 3ம்தேதி ஒரு கிலோ பச்சைமிளகாய் ரூ.16 முதல் ரூ.18 வரை தர்மபுரி உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது மிளகாய் தேவை அதிகரிப்பால், இன்று ஒரு கிலோ ரூ.24க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'காய்கறிகள் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வேளாண் அலுவலர்கள் உதவியுடன் மிளகாய் நடவு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். தர்மபுரி மாவட்டத்தில் பச்சைமிளகாய் அறுவடை நடக்கிறது. இதனால் விலை படிப்படியாக சரிந்து, தற்போது நிலையாக ஒரு விலையில் உள்ளது. இன்று தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.24க்கு விற்பனை செய்யப்பட்டது,' என்றனர்.

Tags

Next Story