கூலி தொழிலாளி உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை

கூலி தொழிலாளி உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், மெதுகுமல் பனவிளை பகுதியில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த கூலில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மெதுகுமல் பனவிளை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (50), கூலி தொழிலாளி இவருக்கும் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் உண்டு, இவருக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக மனநிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாஸ்த மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரது அலறும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக மரணமடைந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story