திருப்பத்தூர் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
கோப்பு படம்
திருப்பத்தூர் அடுத்த ஏரிகொடி பகுதியில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் அடுத்த ஏரிகொடி பகுதியில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை! திருப்பத்துார் அடுத்த திருமால் நகர் அருகே ஏரிகொடி பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(54).
கூலி தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி குடியை விட முடியாமல் தவித்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த சண்முகம் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது தகவல் அறிந்த திருப்பத்துார் கிராமிய போலீசார் அங்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சண்முகத்தின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சண்முகத்துக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story