குமரி அருகே கடன் பிரச்சனையால் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
காவல் நிலையம்
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37) இவர் தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 7 வயதில் ஒரு மகளும் ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். மணிகண்டன் வேலைக்கு சென்ற இடத்தில் முதுகில் அடிபட்டதனால் சில மாதங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இதனால் இவர் தனது குடும்பத்தை நடத்துவதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடன் பிரச்சினை தீர்க்க முடியாதால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த அவரது மனைவி ஜெயந்தி தென்தாமரைக் குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.