ஓடையில் பைக் கவிழந்து தொழிலாளி பலி
தொழிலாளி பலி
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஓடையில் பைக் கவிழந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கீழசுரண்டை காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரம் மகன் ரமேஷ்(37). கட்டடத் தொழிலாளியான இவா், பணியை முடித்து விட்டு தனது பைக்கில் ஆலங்குளம் சென்றார். நேற்று இரவு நேரத்தில் சுரண்டை திரும்பும் போது, கழுநீா்குளத்தில் உள்ள ஓடையில் தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். காலையில் அவ்வழியே சென்றவா்கள் அளித்த தகவலின் பேரில் வீரகேரளம்புதூா் போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Next Story