பாண்டமங்கலம் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலி
கோப்பு படம்
பரமத்தி வேலூர் தாலுகா, நெட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (25). இவரது மனைவி ஜோதிகா (25). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தேங்காய் குடோனில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதிகா.
இவர்களுக்கு யோஜனா (6) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அஜித் தனது நண்பரிடம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி அவரது காரை எடுத்துச் சென்றுள்ளார். நேற்று காலை நெட்டையாம்பாளையத்தில் ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடிவந்ததை பார்த்து அஜித் காரை திடீரென பிரேக் போட்டுள்ளார்.
இதில் கார் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில் அஜித் காருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் காருக்கு அடியில் உடல் நசுங்கி உயிரிழந்த அஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
.பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக பரமத்திவேலுாரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.