செங்கம் அருகே கிணற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
கோப்பு படம்
செங்கம் அருகே கிணற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலியானர்.
பெங்களூரு காவல் பைசந்திரா பகுதியை சேர்ந்த கிரேன்குமார் (வயது 23) கூலி தொழிலாளி. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள குலால்பாடி கிராமத்தை சேர்ந்த அவரது நண்பரின் திருமணத்திற்காக வந்த போது கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மூழ்கி இறந்த கிரேன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
Tags
Next Story