மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த கூலி தொழிலாளி

மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த கூலி தொழிலாளி

கழிவுநீர் தொட்டி

மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த கூலி தொழிலாளி
மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடக்கிறது. கழிவுநீரை வெளியேற்ற கழிவு நீர் உந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன. பெருமாள் கோவில் தெருவில், புதிதாக 20 அடி அகலம், 8 அடி ஆழத்திற்கு தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு மூடி அமைக்கப்படாத நிலையில், பாதி அளவுக்கு இரும்புத்தகடு மட்டும் போடப்பட்டு உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்தோர், இந்த தொட்டி அருகே அமர்ந்து, மது குடிப்பதை வழக்கமாக வைத்துஉள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதிவாசிகள் சென்று பார்த்தபோது, தண்ணீரில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று, வாலிபரின் உடலை மீட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், 30, என்பதும், வானகரம் மீன் அங்காடியில் சுமை துாக்கும் கூலி தொழிலாளி என்பதும் தெரிந்தது. சரண்ராஜ் உடலில், சிறிய அளவிலான காயங்கள் உள்ளன. அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சரண்ராஜ், கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானாரா அல்லது கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story